Monday, 22 December 2014

இந்திய அரசியலமைப்பு

                                                இந்திய அரசியலமைப்பு

அரசியலமைப்புச் சட்டம் என்பது நாட்டு மக்களை ஆள்வதற்கான அரசியல் முறையின் அடிப்படை கோட்பாடுகளின் தொகுப்பாகும்.

இந்திய அரசியலமைப்பு தற்போது 25 பாகங்களையும், 12 அட்டவணைகளையும், 462 சரத்துக்களையும் கொண்டுள்ளது.

அடிப்படை உரிமைகள்

                                                      அடிப்படை உரிமைகள்

  • அடிப்படை உரிமைகள் என்பவை தனிமனிதனின் அவசியமான  உரிமைகள் ஆகும்.
  • இந்திய அரசியலமைப்பின் III-வது பகுதியில், சரத்து 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
  • அடிப்படை உரிமைகள் அரசியலமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது.
அடிப்படை உரிமைகள் 6 வகைப்படும். அவை,

  1. சமத்துவ உரிமை (சரத்து 14 - 18)
  2. சுதந்தர உரிமை (சரத்து 19 - 22)
  3. சுரண்டலுக்கெதிரான உரிமை (சரத்து 23 - 24)
  4. சமய சுதந்தர உரிமை (சரத்து 25 - 28)
  5. பண்பாடு/கலாசார மற்றும் கல்வியியல் உரிமைகள்(சரத்து 29-30)
  6. அரசியலமைப்பின்படி நீதி பெறும் உரிமை (சரத்து 32)